July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கொரோனாவை கட்டுப்படுத்தும் உள்நாட்டு மருத்துவத்தை விரைவில் விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்துங்கள்”

கொவிட்-19 தொற்றை தடுப்பதற்காக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவம், கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒளடதம் ஆகியன விஞ்ஞான ரீதியிலான ஆய்விற்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், உலகில் கொவிட்-19 தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை, தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.