May 26, 2025 23:54:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் விபரங்களை வெளியிடத் தீர்மானம்

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறை, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் விபரங்களே இவ்வாறு ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், இவ்வாறு விபரங்களை வெளியிடுவதன் மூலம் குற்றவாளிகள் அவமானத்தினாலும் அச்சத்தினாலும் மீண்டும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காகவும்  இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சரத்வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் 118 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க முடியும் என்றும், அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.