இலங்கையின் விமான நிலையங்களை டிசம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கையின் விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக வர்த்தக மற்றும் விஷேட விமான சேவைகள் இடம்பெறும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க, மத்தள மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையங்கள் இவ்வாறாக திறக்கப்படும் என்றும், இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிரந்தர நேர அட்டவணையுடனான பயணிகள் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் தினம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கொவிட் தொற்று நிலமையை தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் நாட்டின் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விசேட விமான சேவைகள் மாத்திரம் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.