July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான அறிவித்தல்

File Photo: defence.lk
கொழும்பில் வெள்ளவத்தை – மயூரா பிளேஸ் பிரதேசம் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மோதரை, கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராமசேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பேர்ஹசன் வீதியின் வலதுபக்கம் ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுனுப்பிட்டி கிராமசேவகர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் 60 ஆம் இலக்கத் தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டிய கிராமசேவகர் பிரிவு, ஹேக்கித்த கிராமசேவகர் பிரிவு, குறுதுஹேன கிராமசேவகர் பிரிவு, எவரிவத்த கிராமசேவகர் பிரிவு, வெலிகடமுல்ல கிராமசேவகர் பிரிவு மற்றும் பேலியாகொட பொலிஸ் பிரிவில் பட்டிய கிராமசேவகர் பிரிவு ஆகிய பகுதிகள் நாளை காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

ஆனபோதும் கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.