தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத் ரவி திசாநாயக்க மற்றும் பி.எச்.பி.ப்ரேமசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் முகாமைத்துவ நடவடிக்கைகளில் 37 வருட சேவையுடன், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த மகிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்தே, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு, இலங்கையின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.