
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியுலர் சேவை அலுவலகம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சியுலர் அலுவலகத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த அலுவலகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சியுலர் அலுவலகத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் கொன்சியுலர் அலுவலகத்தின் சேவையை பெற்றுக்கொள்ள காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான காலப்பகுதியில் 388 724 90 16 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.