July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது ஏன்?’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் மிக மோசமான வரவு – செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, வாக்கெடுப்பில் அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர் சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதும், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போதும் அதை எதிர்த்து நாம் உரையாற்றினோம்.

இதனிடையே வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதில் நாம் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே வரவு – செலவுத் திட்டம் மீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பிலும் நாம் எவரும் பங்கேற்பதில்லை என்று நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுத்தோம்.

கோட்டாபய அரசின் மிக மோசமான வரவு – செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியே தீரும் என்பதும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்தநிலையில், வாக்கெடுப்பில் நாம் பங்கேற்று அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.