Photo: Facebook/ Deshabandhu thennakoon
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநிலைமை குறித்து இன்று கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுமார் 14 தொடர்மாடி குடியிருப்புகள் 6 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி, தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு பீசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை விரைவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தொடர்மாடி குடியிருப்புகளில் இதுவரை பீசீஆர் அல்லது அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு விரைவாக அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.