கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அரசாங்கம் தாமதமின்றி தீர்மானங்களை எடுக்க வேண்மென்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தாமதிக்குமாக இருந்தால் அடிப்படைவாதம் தலைதூக்க காரணமாக அமைந்துவிடும் என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்காமையால் முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையடைந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஹக்கீம், இதனால் கடுமையான கொள்கைகளில் இருந்து வெளிவாருங்கள் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இந்த விடயம் பிரச்சினையை நோக்கி கொண்டு செல்லக் கூடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனால் கொவிட்டால் இறப்பவர்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டு விசேட தொற்றுநோய் நிபுணரான அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான திஸ்ஸ விதாரண போன்றோரிடம் ஆலோசனைகளை கேட்டு இது தொடர்பாக நல்ல முடிவை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.