May 28, 2025 14:02:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

File Photo: Twitter/ Srilanka red cross

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அக்கரைப்பற்றில் 6 பேரும், ஆலையடிவேம்பில் 3 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், அம்பாறையில் ஒருவரும், உகணையில் 3 பேரும், அட்டாளைச்சேனையில் 2 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை  கல்முனை சுகாதார பிராந்தியத்தின் கீழுள்ள அக்கரைக்கரைப்பற்று சந்தை ஊடாக 305 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தால் நாளாந்தம் வெளியிடப்படும் கொரோனா தொற்று தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் இதுவரையிலும் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 96 பேரும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 19 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில 340 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.