Photo: Facebook/ Lohan E. Ratwatte
உயர் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலையை நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீனா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புதிதாக அமைப்பதற்கு எதிர்பார்க்கும் சிறைச்சாலையானது விளக்க மறியல் சிறைகள், புனர்வாழ்வு நிலையங்கள், தொழிற்பயிற்சி மற்றும் விளையாட்டு மையங்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனபோதும், புதிய சிறைச்சாலை அமைக்கப்படும் இடம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றப்படும் இடம் தொடர்பாக இராஜாங்க அமைச்சரால் குறிப்பிடப்படவில்லை.
இதற்கு முன்னரான அரசாங்கம் வெலிக்கடை சிறைச்சாலையை மேல் மாகாணத்தின் ஹொரண பகுதிக்கு மாற்றுவதற்று திட்டமிட்டிருந்தது. ஆனாலும் இப்போது சிறைச்சாலையை மாற்றும் இடம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
குறித்த சிறைச்சாலையானது நகர்புற மேம்பாட்டு ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவே சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.