யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ-9 வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி குறித்த கார் பயணித்துக்கொண்டிருந்த போது அதன் டயர் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்துள்ள கார் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் நான்கு வயது சிறுவனும், 35 வயது பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.