தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் நாளை கடமையேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஜீ. புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக எம்.எம். மொஹமட், எஸ்.பி. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக் காலம் கடந்த நவம்பர் மாதம் 02 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.