January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் டயர் தொழிற்சாலையை அமைக்க பெருமளவு வரிச் சலுகையுடன் சீனாவுக்கு அனுமதி

file photo: Facebook/ Hambantota International Port

ஹம்பாந்தோட்டையில் பெரிய டயர் தொழிற்சாலையொன்றை அமைக்கும் சீனாவின் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சீன டயர் தொழிற்சாலைக்கு, இலங்கை பெருமளவு வரிச் சலுகை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சீனாவின் ஷந்தொங் ஹாஒஹவா டயர் தொழிற்சாலையே, இவ்வாறு ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக வலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

121 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்தத் தொழிற்சாலை மூலம் 2,000 தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று வருடங்களில் டயர் உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், 80 வீதமான டயர்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.