May 29, 2025 6:39:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்படும்”

Photo: Facebook/ Namal Rajapasksa

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றால் அது மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் முன்னைய ஆட்சியில் எவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதிகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சுற்றுலாத்துறை மற்றும் கல்வித்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.