வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையிலே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர், வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இன்று மன்னாரில் காற்றாலை நிலையம் திறப்பது குறித்து எமக்கு தெரியாது, எவரும் அறிவிக்கவும் இல்லை அழைப்பு விடுக்கப்படவும் இல்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் நாம் வெற்றிலையில் மை பார்த்து நிகழ்வுகளுக்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடந்தது என்பதை நாம் நிராகரிக்கவில்லை, ஆனால் வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.
அரசாங்கத்தின் அபிவிருத்திக்கு எப்போதுமே தயாராக உள்ளோம். எமது மக்களின் நலன் கருதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்று சேர்ந்து பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.