July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் கையளித்துள்ளார்.

மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2,043 பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி இந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை திரட்டுவதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திர ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.