November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி – திகன நில அதிர்வுகளை அளவீடு செய்ய நடவடிக்கை

கண்டி – திகன   பகுதிகளில் பதிவான நில அதிர்வுகளை அளவீடு செய்ய புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நில அதிர்வுகள் சுண்ணக் கல் உடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் பதிவானதா என்பது தொடர்பில் ஆராய, குறித்த பகுதியில் மூன்று நில அதிர்வுமானிகள் இன்று பொருத்தப்படவுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலைவர் அனுரவல்பல தெரிவித்துள்ளார்.

குறித்த நில அதிர்வுகள் தொடர்பான விரிவான புவியியல் ஆய்வை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் திகதி கண்டியின் சில பகுதிகளில் 4 நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன. இந்த நில அதிர்வுகளினால் ஓர் அதிர்வு பூமிக்கு அடியிலேயே உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலைவர்  தெரிவித்தார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் பூமிக்கு அடியில் ஏற்பட்டதாக கூறப்படும் அதிர்வு பதிவாகவில்லை. ஏனைய 3 நில அதிர்வுகளும் அங்குள்ள கருவிகளில் பதிவாகியுள்ளது.

மேலும், கண்டி விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் இடைக்கிடையே பதிவாகும் நில அதிர்வு தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்திற்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.