July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘8,000 கைதிகளை விரைவில் விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு’

சிறையிலுள்ள கைதிகளில் குறைந்தது 8,000 கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்கவும், மரண தண்டனையை 20 ஆண்டுகளாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டும், அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டும் குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரையிலும் 28 சிறைச்சாலைகளில் 28,951 சிறைக்கைதிகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதன்படி கொவிட் -19 சூழ்நிலையை கருத்திற்கொண்டு பொதுமன்னிப்பு வழங்கப்படக்கூடிய சிறைக்கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக பொது மன்னிப்பு வழங்குவதற்காக நீதியமைச்சு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இதற்கு அனுமதியளிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்கவும், மரண தண்டனையை 20 ஆண்டுகளாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களின் தலைமையில் கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்ற குழுவறையில் குழு கூடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.