
File Photo
வடக்கில் சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் முன்னரே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று கிளிநொச்சி பகுதிக்கு மேற்கொண்டிருந்த விசேட விஜயத்தின் போதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.