January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உக்ரேன் விமானப் பணியாளரிடம் இருந்தே மினுவாங்கொடை கொத்தணி ஆரம்பம்’

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணமாக அமைந்த மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில், கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று புதிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியானது, உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த விமானக் குழு உறுப்பினரால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக நாடாளுமன்றத்தில் கொவிட்- 19 தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொடை  தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வைரஸ் பரவிய விதம் குறித்த ஆய்வு, பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கமையவே இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.