February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மார்ச் 1 முதல் 11 வரை நடத்தத் தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதமளவில் நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பரீட்சைக்கான புதிய திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததையடுத்து பரீட்சை பிற்போடப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மேல் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 2021 ஜூன் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.