
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,இலங்கையில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.