கண்டி, உடவத்தகலை வனத்தில் அண்மைக் காலமாக கணிசமான அளவு குரங்குகள் உயிரிழந்துள்ள நிலையில், குரங்குகளின் உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளின் திடீர் உயிரிழப்புக்கான காரணம், கொரோனா தொற்றாக இருக்குமோ என்று வன விலங்கு பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், குரங்குகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, உயிரிழந்த குரங்கொன்றுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை முடிவுகளின்படி, குரங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குரங்குகள் ஒரு வகை விஷம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.