January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை தேடி நடவடிக்கை

புரவி சூறாவளியை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமடு குளத்தை அண்டிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்பல இவ்வாறாக வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சில மாடுகள் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதையடுத்து குறித்த பகுதியில் காணமால் போன கால்நடைகளை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் பங்களிப்புடன் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற தேடுதல் பணிகளின் போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல்போன மாடுகளை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.