June 15, 2025 16:54:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க காலமானார்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க காலமானார்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஏக்கநாயக்க, குருநாகல் பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தனது 67 ஆவது வயதில் இன்று காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள டி.பி.ஏக்கநாயக்க, அதன்போது அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சராக பதவிகளை வகித்துள்ளார்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவர், காணி விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு டி.பி.ஏக்கநாயக்க தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.