October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் வட மாகாணத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

வடக்கில் தொடரும் சிரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 21,844 குடும்பங்களை சேர்ந்த 72,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான காற்று மற்றும் வெள்ளத்தால் 66 வீடுகள் முழுமையாகவும், 2886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,011 குடும்பங்களை சேர்ந்த 3841 பேர் 42 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 2,227 குடும்பங்களை சேர்ந்த 7,784 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1,736 குடும்பங்களை சேர்ந்த 5,122 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 703 குடும்பங்களை சேர்ந்த 2,151 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.