இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமடகொட பிரசேத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை,இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 669 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,674 ஆக அதிகரித்துள்ளது.