May 23, 2025 7:57:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஷமல் செனரத்

(file photo: Facebook/ Shamal Senarath)

ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஷமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்ததையடுத்தே, பதில் பொதுச் செயலாளராக ஷமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 31 ஆம் திகதி வரையே அவர் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஷமல் செனரத் செயற்பட்டு வந்துள்ளார்.

அண்மையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஷமல் செனரத் ஆகியோருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஷமல் செனரத் வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.