February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை: ‘வெள்ளத்தில் மூழ்கியுள்ள யாழ். பேருந்து நிலையம்’

இலங்கையின் வட மாகாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ். பேருந்து நிலையம் மற்றும் அதனைத் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

வாங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தோடு வந்த புரவி புயல் இலங்கையை விட்டு நீங்கினாலும், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் வடக்கில் தொடர்கின்றது.

இதேநேரம், புரவி சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் 15,459 குடும்பங்களைச் சேர்ந்த 51,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும், யாழ்ப்பாணத்தில் 53 வீடுகள் முழுமையாகவும் 2008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.