மாவீரர் தினத்தன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் கார்த்திகைப் பூ ஒளிரச் செய்யப்பட்டமை பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயமாகும் என்று இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தலின் போது, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் கார்த்திகைப் பூ ஒளிரச் செய்யப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த ஊடகத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரித்தானிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பேரணிகள் உட்பட அனைத்து விடயங்களையும் கையாள்வது பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயம் என பிரித்தானிய தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பிரித்தானிய தூதரகம் ஒரு வரியில் பதிலளித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.