
File Photo
அட்டுலுகம பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அவரின் முகத்தில் உமிழ்ந்த கொரோனா தொற்றாளர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவர், அந்தப் பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.