
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 85 மற்றும் 71 வயதுடைய இரண்டு ஆண்களும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும்,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,488 ஆக அதிகரித்துள்ளது.