January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி, ஒருவர் உயிரிழப்பு

புரவி புயலைத் தொடர்ந்து தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினர் இன்று காலை கொடிகாமம் மத்தி, நாகநாதன் வீதியால் செல்லும் போது, நீர் நிறைந்த வீதியில் மயக்கமடைந்த இளைஞன் மீட்கப்பட்டு, மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.