May 28, 2025 11:02:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மார்ச் மாதம் நடத்த உத்தேசம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடத்த முடியுமென்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மேல் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி குறித்த பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டால், பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.