
file photo: Facebook/ Asha de vos
இலங்கையைச் சேர்ந்த கடல்சார் உயிரியல் விஞ்ஞானி ஆஷா டீ வோஸ் 2020 ஆம் ஆண்டுக்கான கடல் ஹீரோவாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஸ்கியுபா டைவிங் சஞ்சிகை 2020 ஆம் ஆண்டுக்கான கடல் ஹீரோவாக ஆஷாவைத் தெரிவுசெய்து, விருது வழங்கியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் வட பகுதியில் ஆஷா மேற்கொண்ட நீலத் திமிங்கிலங்கள் குறித்த முன்னோடி ஆய்வைப் பாராட்டியே, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் பாதுகாப்பு ஆய்வு மற்றும் கல்வி தொடர்பான இலாப நோக்கற்ற அமைப்பின் ஸ்தாபகரான ஆஷா டீ வோஸ், நீலத் திமிங்கிலங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
விருதுடன் ஆஷாவுக்கு 5000 அமெரிக்க டொலர் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் மூலம் அவர் இலங்கை மாணவர்களுக்கு கடல் பாதுகாப்பு சார் செயலமர்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.