
file photo: Facebook/ Daljith Aluwihare
மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரவை, அந்தப் பதவியில் இருந்து நீக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக டல்ஜித் அலுவிஹார, மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநரால் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், டல்ஜித் அலுவிஹாரவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அத்துடன், அது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
3 மாதங்களுக்குள் குறித்த விசாரணை அறிக்கையை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தொடர்பாக அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைய, நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டல்ஜித் அலுவிஹார பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, டல்ஜித் அலுவிஹாரவின் கடமைகளை முன்னெடுப்பதற்கும் மேயரின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் பிரதி நகர மேயர் சந்தனம் பிரகாஷ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.