January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே நாளில் 878 பேருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான  878 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,410 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட அனைவரும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் திவுலுபிட்டிய – பேலியகொடை கொரோனா கொத்தணிகளின் ஊடாக தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 21,861 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 487 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,304 ஆக அதிகரித்துள்ளது.

கொலன்னாவை தபால் நிலையங்களுக்கு பூட்டு

கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர.

இதனையடுத்து, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, குருநாகல் மாவடட்த்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இன்று விழிர்ப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரதான பாலத்தடியில் காலை 8 மணியளவில் மன்னார் பொலிஸாரால் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

இதன் போது முச்சக்கர வண்டிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதுடன், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறிய 950 பேர் கைது

இதுவரை, சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றியவர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சுகாதார பிரிவினரின் அர்ப்பணிப்பான சேவையினூடாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.