அனர்த்த நிவாரண பொறிமுறைக்கு அமைய மாவட்ட செயலாளர்களுக்கு ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு, கிழக்கு மற்றும் வன்னியில் உள்ள இராணுவ கட்டளை தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், புரவி சூறாவளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் சேதங்களை குறைத்துக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புரவி சூறாவளிக்கு முகங்கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிவாரண பொறிமுறைக்கமைய அரசாங்க அதிகாரிகளுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் அதிகபட்ச ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.