January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடத்தல் தீவில் வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருவதுடன் கடற்பிரதேசங்கள் மிகக் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து இன்று மாலை 5 மணிக்குப் பின்னர் மன்னாரை நோக்கிச் செல்லவுள்ள நிலையிலேயே மன்னார் கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்சியான மழை பெய்து வருவதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.