சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று முற்பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னதாக, சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு அமைச்சராக சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பதவி வகித்தார்.
இதேவேளை, இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் தொடர்பான தொழில்துறை இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்தே உள்ளமை குறிப்பிடத்தக்கது.