இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும், கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும், ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.