May 23, 2025 5:35:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கார்த்திகை தீபத் திருநாளில் வடக்கில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம்’

வடக்கு மாகாணத்தில் கார்த்திகை தீபத் திருநாளில் , இராணுவம்    நியாயமற்ற வகையில் நடந்துகொண்டதாக, கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளதாக, இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு மிக விரைவில் கூடி அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.