தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
வாகரை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளர் சி. கோணலிங்கம் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குறித்த வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆதவராக 6 பேரும் எதிராக 12 பேரும் வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
“உள்ளுராட்சி ஆணையாளருடைய கடிதத்திற்கு அமைவாக, எதிர்வரும் காலங்களில் சபை நடவடிக்கைகளை சட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என சபையின் தவிசாளர் சி. கோணலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடுகையில், கட்சியின் சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிரா உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
குறித்த அமர்வின் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சபையின் தவிசாளர் சி. கோணலிங்கம் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.