File Photo
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை, சூறாவளியாக மாறி நாளைய தினத்தில் இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி ஊடாக கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டே பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சூறாவளியால் கிழக்கில் அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதால் அதற்கு முகம்கொடுக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துளாளர்.
இதன்படி இடம்பெயரும் மக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.