மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் கொண்ட குழுவொன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார்.
குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சரோஜினி குசலா வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர் யூ.ஆர்.டி. சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண ஹபுகஸ்வத்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இந்தக் குழு சிறைச்சாலை வன்முறைகளின் பின்னணி, வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் போன்றவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளது.
ஒரு வாரத்தில் சம்பவம் குறித்த இடைக்கால அறிக்கையொன்றும் ஒரு மாதத்தில் முழுமையான பரிந்துரைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.