May 1, 2025 6:01:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்தோர் தொகை 109 ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்தோர் தொகை 109 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் 9 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, 107 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்பது கைதிகளின் நிலை கவலைக்குரியதாக இருக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமானோருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராகம மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கைதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளதோடு, ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.