
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாணவர்கள் முயற்சித்த நிலையில் அதனை பொலிஸார் தடுத்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் இன்று மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் விளக்குகளுடன் தயாராகியிருந்தனர்.
அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.