
Photo: Facebook/ Sarath Weerasekera
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிதி சேகரிக்கும் நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு ‘இண்டர்போல்’ இன் உதவியை நாடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் நாட்டிற்கு வெளியே விடுலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அரசியலிலும் சர்வதேச பொருளாதாரத்திலும் அவர்கள் தாக்கம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் நாட்டிற்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் குழப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நாட்டிற்குள் மீண்டும் அவர்களது செயற்பாடுள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை புலனாய்வு மற்றும் குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யார், இவர்களின் சர்வதேச தொடர்புகள் என்ன என்பதை கண்டுபிடிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரிவினரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.