திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, புளியங்குளம் – தேவாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள உயரமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழுந்த நிலையில் அந்த சிறுவன் அந்த இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்தார்.
இதன்பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.